கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் 2016ம் ஆண்டிற்கான பிரதேச இளைஞர் கழக சம்மேளனத் தெரிவு

0
244

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் 2016ம் ஆண்டிற்கான பிரதேச இளைஞர் கழக சம்மேளனத் தெரிவு நேற்று (19.02.2016) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் முன்னாள் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத் தலைவர் ஜே.எம். திபாஸ் தலைமையில் நடைபெற்றது.

பிரதேச செயலக எல்லைக்குற்பட்ட ஒன்பது கிராம சேவகர் பிரிவுகளிலுமிருந்து பதிவு செய்யப்பட்ட பணிரெண்டு இளைஞர் கழகங்களிலிருந்து பிரதேச இளைஞர் கழக சம்மேளன தெரிவு நடைபெற்றது.

இந்த ஆண்டிற்கான புதிய இளைஞர் கழக சம்மேளன தலைவராக இரண்டாவது முறையாகவும் ஜே.எம். திபாஸ், பதவி வழியாக செயலாளராக பிரதேச இளைஞர் சேவை அதிகாரி எம்.ஜ.எம். றம்ஸி, பொருலாளராக ஆர். ஹஸ்மீர், அமைப்பாளராக இஸட்.எம். றிகாஸ், உப தலைவராக ஆர்.எம். றிப்கான், உப செயலாளராக கே.எல்.எம். ஹிறாஸ், உப அமைப்பாளராக ஏ.எம். வபாஸ் ஆகியோர் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டனர்.

இப் புதிய நிருவாக தெரிவு கூட்டத்திற்கு கோறளைப்பற்று மத்தி உதவி பிரதேச செயலாளர் எஸ்.எம். அல் அமீன், மட்டகளப்பு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி நிசாந்தி அருள் மொழி, மன்முனை வடக்கு இளைஞர் சேவை அதிகாரி பீ. பிரசாந்தினி, கோறளைப்பற்று மத்தி இளைஞர் சேவை அதிகாரி எம்.ஜ.எம். றம்ஸி ஆகியோர் கலந்து கொண்டனர்.

வாழைச்சேனை நிருபர்

LEAVE A REPLY