பல நாள் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் சிக்கினர்: கல்குடாவில் சம்பவம்

0
143

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பொலிஸ் பிரிவில் தொடர்ந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்த இருவரையும் திருட்டுக்கு பயன்படுத்திய முச்சக்கர வண்டி ஒன்றையும் நேற்று (வியாழக்கிழமை) இரவு கைது செய்து இன்று வாழைச்சேனை நிதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதாக கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தம்பிகநவரத்ன தெரிவித்தார்.

கல்குடா பொலிஸ் பிரிவில் கல்குடா, பாசிக்குடா, கருங்காலிச்சோலை, கல்மடு போன்ற பிரதேசங்களில் இரவு நேரங்கலில் கோழி, ஆடு, மாடு போன்ற பிரானிகள் தொடர்ந்து திருடப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு கருங்காலிச்சோலை பிரதேசத்தில் இருந்து ஒரு ஆட்டினை திருடிய சந்தர்ப்பத்தில் ஆட்டு உரிமையார் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து ஆட்டை திருடிய திருடர்கள் இருவரையும் ஆட்டினை ஏற்றிச் செல்ல பயன்படுத்திய சிவப்பு நிற நுP – ஓஓ – 7576 இலக்க முச்சக்கர வண்டியையும் கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனையைச் சேர்ந்த சந்தேக நபர்களை இன்று (வெள்ளிக்கிழமை) வாழைச்சேனை நீதவான் நீதி மன்றில் ஆஜர்படுத்திய போது இவர்களை எதிர்வரும் 04.03.2016ம் திகதி வரை விளக்கமரியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி ஹபீப் ரிபான் உத்திரவிட்டுள்ளார்.

-வாழைச்சேனை நிறுபர்-

LEAVE A REPLY