வித்தியா விவகாரம்; குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு நீதவான் எச்சரிக்கை

0
114

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு தொடர்பில் குற்றப்புலனாய்வு பொலிஸார் இதுவரையில் மேற்கொண்ட விசாரணை அறிக்கையை, அடுத்த வழக்குத் தவணையில் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏம்.எம்.எம்.றியால் இன்று கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கு, இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, இந்த வழக்கு ஆரம்பிக்கப்பட்டு இவ்வளவு காலமாகியும் எவ்வித அறிக்கைகளையும் குற்றப்புலனாய்வு பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என சுட்டிக்காட்டிய நீதவான், அடுத்த தவணையான எதிர்வரும் மார்ச் மாதம் 4 ஆம் திகதி விசாரணை அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவேண்டும். தவறும் பட்சத்தில் நீதிமன்றம் மேலதிக உத்தரவை பிறப்பிக்கும் என கூறினார்.

இதேவேளை, சந்தேகநபர்கள் தங்கள் கருத்துக்களை நீதிமன்றத்தில் முன்வைக்க முயன்றபோதும், நீங்கள் உங்கள் சட்டத்தரணியூடாகவே முன்வைக்க முடியும் என நீதவான் தெரிவித்தார்.

-ET-

LEAVE A REPLY