வவுனியாவில் கொல்லப்பட்ட மாணவி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்

0
206

வவுனியா உக்குளாங்குளத்தில் கடந்த செவ்வாய்கிழமை கொலை செய்யப்பட்டிருந்த மாணவி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் தெரிவித்தார்.

ஆசிரியையான தாயாரும் சகோதரர்களும் பாடசாலைக்கும் சென்றிருந்த நிலையில் மாணவி கெ. ஹரிஸ்ணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

தாயார் 2.30 அளவில் வீடு திரும்பிய போது வீட்டின் அறையொன்றில் மாணவி கெ. ஹரிஸ்ணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதன் பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் மற்றும் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

வவுனியா வைத்தியசாலை நிபுணத்துவ சட்ட வைத்திய அதிகாரி ஜே.சி.சமரவீர கடமை நிமிர்த்தம் கொழும்பு சென்றிருந்தமையால் நேற்று வியாழக்கிழமை பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சடலம் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் இந்த மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் தெரிவிக்கையில்,

குறித்த மாணவி பாலியல் வன்புனர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தன்னை வன்புனர்வுக்கு உட்படுத்த முயன்றவரிடம் இருந்து காப்பாற்ற முயன்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் வன்புனர்வின் பின் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு, அதன் பின் தூக்கில் போடப்பட்டுள்ளது.

இதனால் இக் கொலை மற்றும் வன்புனர்வு தொடர்பான விசாரணை வவுனியா பெருங்குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தின் துணையுடன் மேற்கொண்டு விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிசாரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சடலம் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அதேவேளை, சடலத்தை இறுதிக் கிரியையின் போது புதைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், மாணவியின் உடற்பாகங்கள் சில மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

LEAVE A REPLY