வஸீம் தாஜுதீன் விவகாரம்: காணொளிகளை ஆய்வுகளுக்கு அனுப்ப நடவடிக்கைகள் துரிதம்

0
121

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் படு­கொ­லை­யுடன் தொடர்­பு­டை­ய­தாக சந்­தே­கிக்­கப்­படும் சி.சி.ரி.வி.கண்­கா­ணிப்பு கமரா பதி­வு­களை வெளி நாட்டு ஆய்­வு­க­ளுக்கு அனுப்­பு­வது குறித்த மதிப்­பீட்டு நட­வ­டிக்­கைகள் துரி­த­மாக இடம்­பெற்று வரு­வ­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவின் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இதற்­காக குறித்த சீ.சீ.ரி.வி. கண்­கா­ணிப்பு கமரா ஒளிப் பதி­வு­களை அமெ­ரிக்கா, இங்­கி­லாந்து, கனடா உள்­ளிட்ட பல முன்­னணி நாடு­களின் ஆய்­வ­கங்­க­ளி­ட­மி­ருந்து மதிப்­பீட்டு அறிக்­கைகள் கோரப்பட்­டுள்­ள­தா­கவும் அதனை மையப்­ப­டுத்தி எடுக்­கப்­படும் தீர்­மா­னத்­துக்கு அமை­வாக எந்த ஆய்­வ­கத்­துக்கு அனுப்­பு­வது என முடி­வெ­டுக்­கப்பட்டு அங்கு மிக விரைவில் அந்த வீடியோ ஆதா­ரங்கள் அனுப்­படும் என அந்த தக­வல்கள் தெரி­வித்­தன.

வசீம் தாஜுத்தீன் கொலை செய்­யப்­ப­டு­வ­தற்கு முன்னர் வாக­ன­மொன்றில் பய­ணிப்­பது சி.சி.ரி.வி. கமெ­ராவில் பதி­வா­கி­யுள்­ளது. ஆயினும், அந்தக் காட்சி தெளி­வின்மை கார­ண­மாக, வசீம் தாஜுதீன் பய­ணித்த வாக­னத்­தினை அடை­யாளம் காண முடி­யாமல் உள்­ள­தாக நீதி­மன்றில் தெரி­விக்­கப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து, குறித்த காட்­சிகள் அடங்­கிய இறு­வட்­டுக்­களை ஆழ­மான ஆய்­வு­க­ளுக்­காக வெளி­நாட்டு தட­ய­வியல் பரி­சோ­தனை கூடங்­க­ளுக்கு அனுப்பி வைக்­கு­மாறு கொழும்பு மேல­திக நீதிவான் நிசாந்த பீரிஸ் – குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு கடந்த ஜன­வரி மாதம் 07 ஆம் திகதி உத்­த­ரவு வழங்­கினார்.

ஆயினும், இது­வரை குறித்த இறு­வட்­டுக்கள் வெளி­நாட்டு பரி­சோ­த­னை­க­ளுக்கு அனுப்­பப்­ப­டாமல், நீதி­மன்­றத்­தி­லேயே வைக்­கப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஏற்­க­னவே, நீதி­மன்ற உத்­த­ர­வுக்­கி­ணங்க கொழும்பு பல்­க­லைக்­க­ழக கணினிப் பிரி­வி­ன­ரிடம், குறித்த காட்­சிகள் பரி­சோ­த­னைக்­காக ஒப்­ப­டைக்­கப்­பட்­டி­ருந்­தன. ஆயினும், அந்தக் காட்­சிகள் தெளி­வற்­ற­வை­யாக உள்­ள­மை­யினால், அவற்றில் பதி­வா­கி­யுள்ள வாக­னத்தை அடை­யாளம் காண முடி­ய­வில்­லை­யென, கொழும்பு பல்­க­லைக்­க­ழக கணினிப் பிரிவு தெரி­வித்­தி­ருந்­தது.

இதே­வேளை, மேற்­படி காட்­சி­களை ஆழ­மான பரிசோதனைகளுக்காக வெளிநாட்டுப் புலனாய்வு நிறுவனங்களான எப்.பி.ஐ. அல்லது ஸ்கொட்லான் யாட் பொலிஸாரின் ஆய்வுகூடங்களுக்கு அனுப்பி வைக்குமாறு, கொழும்பு பல்கலைக்கழக கணினிப் பிரிவினர் சிபாரிசு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-VV-

LEAVE A REPLY