”ஓய்வு குறித்து முடிவெடுக்கும் உரிமை டோனிக்கு மட்டுமே உண்டு” ரவி சாஸ்திரி

0
131

இந்திய அணித் தலைவர் டோனியின் ஓய்வு குறித்து முடிவெடுக்கும் உரிமை அவருக்கு மட்டுமே உண்டு என பயிற்சியாளரும் இயக்குனருமான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ஆசியக் கிண்ணம் மற்றும் 20 ஓவர் உலகக்கிண்ணத்திற்காக இந்திய அணி சிறப்பாக தம்மை தயார்படுத்தி வருவதாக தெரிவித்த ரவி சாஸ்திரி,

6-வது இடத்தில் இருந்து நிலைத்து நின்று ஆடுவது மிக சிரமமான ஒன்று என்றார், ஆனால் அதை சவாலாக ஏற்றுக்கொண்டு திறம்பட ஒருவர் செய்துவருவது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

சாதனையாளர்களையும் வெற்றிபெற்றவர்களையும் விமர்சிப்பதை விட்டுவிட வேண்டும் என தெரிவித்த அவர்,

பல ஆண்டுகளாக இந்திய அணியில் 6-வது இடத்தில் நிலைத்து நின்று ஆடி பல வெற்றிகளை டோனி குவித்துள்ளதாக குறிப்பிட்டார்.

பல ஆண்டுகளாக அவரது கடமை அறிந்து சிறப்பாக ஒருவர் செயல்பட்டு வருகின்றார் எனில் அவரது ஓய்வு குறித்தும் அவருக்கு தெளிவான பார்வை இருக்கும் என்றார்.

அதனால் அவரது ஓய்வு குறித்து முடிவெடுக்க வேண்டிய முழு உரிமையும் அவருக்கு மட்டுமே உண்டு எனவும் ரவி சாஸ்திரி குறிப்பிட்டார்.

சரியான தருணத்தில் உரிய முடிவெடுக்கும் திறமை பெற்றவர் டோனி என குறிப்பிட்ட அவர், உரிய நேரத்தில் முடிவெடுக்கும் அவகாசத்தை அவருக்கு தர வேண்டும் என்றார்.

LEAVE A REPLY