சர்வதேச போட்டிகளில் இருந்து சயீத் அஜ்மல் ஓய்வு?

0
155

திறமையுடன் செயல்பட முடியவில்லை எனில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவேன் என பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல் தெரிவித்துள்ளார். சந்தேகத்திற்கு உரிய வகையில் பந்து வீசுவதாக கூறி பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளரான சயீத் அஜ்மலுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கிண்ணப் போட்டி துவங்குவதற்கு ஒரு வார காலம் இருக்கும்போது தடையை நீக்கினர்.

ஆனால் சர்வதேச போட்டிகளில் அனைவரும் எதிர்கொள்ள அச்சப்படும் தனது பழைய பந்துவீச்சை கொண்டுவர அவர் கடுமையாக போராட வேண்டி வந்தது.

இதனிடையே அவர் ஆப் ஸ்பின் பந்துவீச்சில் புதிய உத்தியை பயிற்சி செய்து சர்வதேச போட்டிகளில் விளையாட தயாராகியுள்ளார்.

இந்த புதிய உத்தி தமக்கு கைகொடுக்கவில்லை எனில் சர்வதேச போட்டிகளில் இருந்து தாம் விலக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY