ஐ போன் ‘ஹேக்கிங்’ விவகாரம்: ஆப்பிளுக்கு சுந்தர் பிச்சை ஆதரவு

0
156

ஐ போன் ஹேக்கிங் விவகாரத்தில் ஆப்பிள் நிறுவனத்துக்கு கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆதரவு தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பரில் அமெரிக் காவின் கலிபோர்னியா மாகாணம் சான் பெர்னான்டினோ நகரில் பாகிஸ் தானைச் சேர்ந்த தீவிரவாதியும் அவரது மனைவியும் கண்மூடித்த னமாக சுட்டதில் 14 பேர் உயிரிழந் தனர். அந்த தீவிரவாதி பயன் படுத்திய ஐ போனை ஹேக்கிங் செய்து முக்கிய தகவல்களைப் பெற ஆப்பிள் நிறுவனத்தின் உதவியை எப்.பி.ஐ. போலீஸார் கோரினர். இதற்கு ஆப்பிள் நிறுவனம் முழுஒத்துழைப்பு அளித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதேபோல எந்தவொரு ஐ-போனையும் ‘ஹேக்கிங்’ செய்து தகவல்களைப் பெறும் தொழில்நுட்பத்தை அளிக்க வேண்டும் என்று ஆப்பிள் நிறுவனத்திடம் எப்பிஐ கோரியுள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றமும் எப்பிஐ அமைப்புக்கு சாதகமாக உத்தரவு பிறப்பித் துள்ளது.

இதற்கு ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தங்கள் வாடிக்கையாளரின் அந்தரங்கத்தை பாதிக்கும், வர்த்தகத்தை பாதிக்கும் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தப் பிரச்சினையில் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆப்பிள் நிறுவனத்துக்கு முழுஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது: வாடிக்கையாளர்களின் தகவல்களைப் பாதுகாக்க பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை செல்போன்களில் புகுத்தி வருகிறோம். குற்ற சம்பவங்களின் போது போலீஸாரின் விசாரணைக்கு செல்போன் நிறுவனங்கள் முழுஒத்துழைப்பு அளிக்கின்றன. ஆனால் செல்போனை ‘ஹேக்கிங்’ செய்து தகவல்களைப் பெறும் நடவடிக்கை பெரும் குழப்பங்களை ஏற்படுத்தும். இந்த விவகாரத்தில் ஆப்பிள் நிறுவனத்துக்கு ஆதர வாகச் செயல்படுவோம் என்றார்.

LEAVE A REPLY