கட்சியை மீளக்கட்டியெழுப்புவேன், எவரும் அழிக்க முடியாது: சந்திரிக்கா

0
200

கம்பஹா மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் கம்பஹா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது.

கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமைதாங்கினார்.

இதன்போது முன்னாள் ஜனாதிபதி தெரிவித்ததாவது,

கட்சியை மீளக்கட்டியெழுப்புவேன். சிலர் கட்சியை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். எனினும், உத்தியோகபூர்வ கட்சி உள்ளது. இது முதலாவது சந்தர்ப்பம் அல்ல. கட்சிக்கு முன்னரும் இத்தகைய பிரச்சினைகள் வந்திருந்தன. 17 வருடங்களாக தாக்கப்பட்ட நாம் இறுதியில் மீண்டும் கட்சியைக் கட்டியெழுப்பினோம். ஐக்கிய தேசியக் கட்சி அரசு இருந்தபோது நாம் மீண்டும் ஆட்சிக்கு வந்தோம். தற்போதைய பிரச்சினை பாரிய பிரச்சினை அல்ல. அவை வழமையாக கட்சிகளுக்கு ஏற்படுகின்ற பிரச்சினையாகும். குண்டர்களும், கொலையாளிகளும் அவர்களிடமே உள்ளனர். அச்சுறுத்தல் எமது உயிர்களுக்கே ஏற்பட்டுள்ளது. வேறு அச்சுறுத்தல்கள் இல்லை. கட்சிக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. கட்சியை எவரும் இலகுவில் அழிக்க முடியாது.

-NF-

LEAVE A REPLY