2050–ம் ஆண்டில் 500 கோடி பேருக்கு கிட்டப்பார்வை குறைபாடு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

0
185

ஆஸ்திரேலியாவில் உள்ள நியூசவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம், பிரயின் ஹோல்டன் விசன் இன்ஸ்டிடியூட் மற்றும் சிங்கப்பூர் கண் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

பொது மக்களின் அன்றாட வாழ்வியலில் ஏற்படும் உடல் குறைபாடு குறித்து ஆராய்ச்சி நடத்தப்படுகிறது. அதில் பெரும்பாலான மக்களுக்கு கண்களில் கிட்டப்பார்வை குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.

கடந்த 2000–ம் ஆண்டு முதல் 5 மடங்கு இக்குறைபாடு அதிகரித்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் 2050–ம் ஆண்டில் 500 கோடி பேருக்கு கிட்டப்பார்வை பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகும்.

இது உலக மக்கள் தொகையில் பாதி அளவாகும். இந்த நோயின் கடுமை அதிகரிக்கும் பட்சத்தில் கண்பார்வை பறிபோகும் அபாயமும் ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் தொடர்ந்து கண் பரிசோதனை மூலம் கோளாறுகளை சரி செய்து கொள்ள வேண்டும்.

இல்லாவிடில் பார்வை இழக்கும் அபாயம் ஏற்படும் என இந்திய வம்சாவளியை சேர்ந்த நிபுணர் பத்மஜா சங்கரிதுர்க் மற்றும் தாமஸ் ஜெ நடுவிலாத், கோவின் நய்டு ஆகியோர் தெரிவித்துள்ளனர்

LEAVE A REPLY