வடகொரியா மீது புதிய பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா

0
193

ஹைட்ரஜன் குண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்ததோடு மட்டுமல்லாமல், நீண்டதூரம் இலக்கை கொண்ட ராக்கெட்டை ஏவி உலகநாடுகள் மத்தியில் வடகொரியா கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு அதன் முக்கிய நட்பு நாடுகளான ரஷ்யா மற்றும் சீனாவும் கூட கண்டனம் தெரிவித்தது. மேலும், ஐ.நா.வின் தடையையும் மீறி வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில், அணுகுண்டு சோதனை மற்றும் ராக்கெட் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியாவிற்கு தண்டனையாக ஆசிய நாடுகளில் இருந்து தனிமைப்படுத்தும் பொருட்டு அந்நாடு மீது புதிய தடை விதிக்க அமெரிக்க அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த தகவலை அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதன் மூலம் வடகொரியாவிற்கு மாபெரும் பேரழிவு தொடர்பான தொழில்நுட்ப பொருட்கள் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அணுகுண்டு சோதனை, மனித உரிமைக்கு எதிரான நடவடிக்கை, சைபர் கிரைம் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த தடை விதிக்கப்படுதாகவும் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY