காத்தான்குடி மட்/பிர்தௌஸ் வித்தியாலயத்தின் தேவைகளை கண்டறியும் நோக்குடன் ஷிப்லி பாறூக் திடீர் விஜயம்

0
167

மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திற்குற்பட்ட புதிய காத்தான்குடி மட்/பிர்தௌஸ் வித்தியாலயத்தின் தேவைகளை கண்டறியும் நோக்குடன் வியாழக்கிழமை (18.02.2016) அன்று பாடசாலைக்கு திடீர் விஜயமொன்றை கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கொண்டார்.

பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்களை சந்தித்து பாடசாலையின் அபிவிருத்தி, மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள், மற்றும் பல தேவைகளை கேட்டறிந்து அதற்கான சில உதவிகளை மாகாணசபை மூலம் பெற்று தருவதாக கூறினார் மேலும் உடனடியாக தேவையாக காணப்பட்ட நீர் வளப்பற்றாக்குறை பெற்றுத்தருமாறு பாடசாலை அதிபரினால் விடுக்கப்பட்ட வேண்டுகளினை தீர்க்கும் முகமாக நீர்பம்பி, குழாய்கள், மற்றும் அதற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் தனது சொந்த நிதியிலிருந்து வழங்குவதாக வாக்குறிதியளித்தார்.

LEAVE A REPLY