“இயற்கையுடன் விவசாயம், தீங்கற்ற எதிர்காலம்” நடைபவனி

0
160

“இயற்கையுடன் விவசாயம், தீங்கற்ற எதிர்காலம்”எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் வியாழக்கிழமை விழிப்புணர்வு நடைபவனி இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு வேர்ல்ட் விசன் வாகரைத் திட்டம் நிதி அனுசரணை வழங்கியிருந்தது.

வாகரைப் பிரதேச செயலகத்திற்கு முன் ஆரம்பமான இப்பேரணி மட்டக்களப்பு திருகோணமலை நெடுஞ்சாலையூடாக வம்மிவட்டவான் மைதானம் வரை சென்று விழிப்பூட்டல் கலை நிகழ்ச்சிகளுடன் முடிவுற்றது. நடைபவனியின்போது நஞ்சற்ற உணவு உற்பத்தியை வலியுறுத்தும் வாசகங்கள் எழுதப்பட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டதோடு அவை பயணிகளுக்கு விநியோகமும் செய்யப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.ஆர். ராகுலநாயகி மட்டக்களப்பு வடக்கு உதவி விவசாயப் பணிப்பாளர் வீ. லிங்கேஸ்வரராஜா, வேல்ட்விசன் நிறுவனத்தின் வாகரைக் கிளை முகாமையாளர் பொனிஜஸ்டின் வின்சன்ட், திட்ட இணைப்பாளர் ஜி. சுரேஸ், வாகரைப் பொலிஸ் பொறுப்பதிகாரி அனுஷ சனத் பியதாஸ, பிரதேச செயலக மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், கிராம சேவகர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என அநேகம் பேர் கலந்து கொண்டனர்.

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

4f316c7c-ad7d-477b-ae8f-72cb7c626b78 5e5ab92b-0e32-4441-95fb-47589372f43b 0686a0f7-e2ce-41d7-9e93-cc81b6ee49af 797a80d2-7456-41de-8cef-535be1765a72 a30443cd-7150-4278-8b93-aa48c0280c1b c3e21d92-1497-48b9-b8f7-74a3fca171c4 d0a3fc98-a560-4cd0-a133-4d2374fc4e12 e8317492-8d78-4fbb-95d3-191053d47c0c

LEAVE A REPLY