எதிர்கால சந்ததியின் தேகாரோக்கியம் விவசாயிகளின் கையில்! :ராகுலநாயகி

0
126

எதிர்கால சந்ததியின் தேகாரோக்கியம் விவசாயிகளின் கையில் உள்ளது என மட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலாளர் எஸ்.ஆர். ராகுலநாயகி தெரிவித்தார்.

“இயற்கையுடன் விவசாயம், தீங்கற்ற எதிர்காலம்”எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் வியாழக்கிழமை விழிப்புணர்வு நடைபவனி இடம்பெற்றது.

வாகரைப் பிரதேச செயலகத்திற்கு முன் ஆரம்பமான இப்பேரணி மட்டக்களப்பு திருகோணமலை நெடுஞ்சாலையூடாக வம்மிவட்டவான் மைதானம் வரை சென்று விழிப்பூட்டல் கலை நிகழ்ச்சிகளுடன் முடிவுற்றது.

நடைபவனியின் போது நஞ்சற்ற உணவு உற்பத்தியை வலியுறுத்தும் வாசகங்கள் எழுதப்பட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டதோடு அவை பயணிகளுக்கு விநியோகமும் செய்யப்பட்டன.

அங்கு தொடர்ந்து உரையற்றிய பிரதேச செயலாளர் கூறுகையில் “விசாயிகள் சுயநலம் தவிர்த்து பொதுநோக்கம் கருதி எதிர்கால சமூகத்தின் தேக ஆரோக்கியத்தினைக் கருதிற்கொண்டு இரசாயன கிருமிநாசிகளைத் தவிர்த்து சேதனப் பசளைகளைப் பாவிக்க முயற்சிக்க வேண்டும்.

அதனூடாகவே நஞ்சற்ற விவசாய உற்பத்தியை மேற்கொள்ள முடியும். ஒரு சிறிய மட்டத்தில் தொடங்கும் விழிப்புணர்வு விவசாயப் பிரதேசமெங்கும் வியாபித்தால் ஒட்டு மொத்த சூழலும் நஞ்சற்றதாக மாறும் என்றார்.

மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு வேர்ல்ட் விசன் வாகரைத் திட்டம் நிதி அனுசரணை வழங்கியிருந்தது.

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

LEAVE A REPLY