வழக்குகளிலிருந்து ஷிராணி விடுதலை

0
166

ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக தொடுக்கப்பட்ட 3 வழக்குகளிலிருந்தும் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று (19), இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் சார்பில் ஆஜரான, அரச தரப்பு நீதிபதி டிலான் ரத்நாயக்கவினால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன.

3 வருட சொத்து மதிப்பை வெளியிடவில்லை என தெரிவித்தே, முன்னாண் நீதியரசர் ஷிராணி பண்டாராநாயக்க மீது குறித்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய, குறித்த வழக்குகளிலிருந்து அவரை விடுதலை செய்வதாக அறிவித்ததோடு, அவர் மீது விதிக்கப்பட்டிருந்த, வெளிநாட்டு பயணம் செல்வதற்கான தடையும் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-TH-

LEAVE A REPLY