இலங்கை – ஜேர்மன் இடையே மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்து

0
170

இலங்கை, ஜேர்மனிக்கிடையில் இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்தவும் ஜேர்மனியின் உதவியினூடாக இலங்கையில் அபிவிருத்தியை முனனேற்றவும் இருநாடுகளும் இணக்கம் கண்டுள்ளன.

கல்வி, மொழி, அருங்காட்சியகம், மரபுரிமைகள் மற்றும் கலை பாதுகாப்பு, உயர்கல்வி, விளையாட்டு, உயர்கல்வி முறைமைகள் தொடர்பாடல் , கல்வித்துறை பரிமாற்றஊக்குவிப்பு, பல்கலைக்கழகங்களுக்கிடையே இணைந்த கருத்திட்ட பங்குடமைகளை அதிகரித்தல் போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கும் விரிவான கூட்டுறவு உடன்டிபடிக்கைகளில் இரு நாடுகளும் கைச்சாத்திட்டுள்ளன.

இவ்வுடன்படிக்கைகளில் இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் ஜேர்மனிக்கான இலங்கைத் தூதுவர் திரு. கருணாதிலக அமுனுகம ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.

நேற்று கைச்சாத்திடப்பட்ட மூன்று உடன்படிக்கைகளின் விபரங்கள்

01. கலாசார உறவுகள் மற்றும் கல்விக்கொள்கை தொடர்பான கூட்டுறவு இணைந்த பிரகடனம். இது கல்வி, மொழி, அருங்காட்சியகம், மரபுரிமைகள் மற்றும் கலை பாதுகாப்பு, உயர்கல்வி, விளையாட்டு போன்ற துறைகளை உள்ளடக்கியுள்ளது. 02. இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கும் ஜேர்மன் கல்வித்துறை பரிமாற்றச் சேவைக்கும் இடையிலான கல்வித்துறை கூட்டுறவு புரிந்துணர்வு உடன்படிக்கை.

இது இரு நாடுகளிலும் உயர்கல்வி முறைமைகள் தொடர்பான தகவல் வழிகளை மேம்படுத்துதல், இரு தரப்புகளிலும் கல்வித்துறை பரிமாற்றத்தை ஊக்குவித்தல், இணைந்த கருத்திட்டங்களை அதிகரித்தல், பல்கலைக்கழக்களுக்கிடையிலான பங்குடமை ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

03. ஹில்டபேர்க் பல்கலைக்கழகத்துடனான புரிந்துணர்வு உடன்படிக்கை.

ஜேர்மனியின் முன்னணி பல்கலைக்கழகமான ஹில்டபேர்க் பல்கலைக்கழகத்தில் கற்பிப்பதற்கும் ஆய்வுகளை மேற்கொள்வதற்குமான பேராசிரியர்கள் பரிமாற்றத்தை உள்ளடக்கியது.

LEAVE A REPLY