உலகில் 34 நாடுகளில் ஜிகா வைரஸ் – WHO

0
191

உலகில் 34 நாடுகளில் ஜிகா வைரஸ் பரவியுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, கரிபீயன் பகுதிகளில் ஜிகா வைரஸ் பரவி வருகிறது.

கடந்த 1947-ல் உகாண்டாவில் உள்ள ‘ஜிகா’ என்ற காட்டில் குரங்குகளிடம் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. அதனால் ஜிகா வைரஸ் என்று பெயரிடப்பட்டது. டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் கொசுக்களே ஜிகா வைரஸையும் பரப்புவதாக கண்டறியப்பட்டுள்ளது.

எனினும், ஜிகா வைரஸுக்கு தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை. இதனால் பல நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.

இதுகுறித்து நியூயார்க்கில் உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குநர் நடேலா மெநாப்தே கடந்த செவ்வாய்க் கிழமை ஐ.நா. உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளிடம் கூறிய தாவது:
உலகின் 34 நாடுகளில் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை அமெரிக்கா, கரீபியன் பகுதிகளை சேர்ந்த நாடுகள்.

பிரேசிலில் மட்டும் ஜிகா வைரஸால் 4,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தீவிரம் அடைவதற்கு முன்னர் ஆண்டுக்கு 163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்போது ஜிகா வைரஸால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது கவலை அளிக்கிறது.

இந்த வைரஸ் பாதிப்பைத் தடுக்க செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வைரஸ் பாதிப்பு உள்ள நாடுகளுடன் இணைந்து மருத்துவ பரிசோதனை, மேலும் பரவாமல் தடுப்பது, சிகிச்சை உட்பட அனைத்து விட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த ஜிகா வைரஸ் பாதிப்பைத் தடுக்க அவசர கால நிதி உருவாக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY