2024 ஒலிம்பிக்: 4 நகரங்கள் போட்டி

0
98

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. கடைசியாக 2012–ம் ஆண்டு லண்டனில் நடந்தது. இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 5–ந்தேதி முதல் 21–ந்தேதி வரை பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனீரோ நகரில் நடந்தது. 2020 ஆண்டு ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது.

2024–ம் ஆண்டுக்கான ஒலிம்பிக்கை நடத்த 4 நகரங்கள் போட்டியில் உள்ளன. பாரிஸ் (பிரான்ஸ்), ரோம் (இத்தாலி), லாஸ் ஏஞ்சல்ஸ் (அமெரிக்கா), புடா பெஸ்ட் (அங்கேரி) ஆகிய நகரங்கள் களத்தில் உள்ளன. இதை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் தாமஸ் பேச் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு செப்டம்பர் 13–ந்தேதி பெரு தலைநகர் லிமாவில் நடைபெறும் வாக்கெடுப்பில்  எந்த நகரத்துக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது தெரியவரும்.

LEAVE A REPLY