மட்/மாவிலங்குதுறை விநாயகர் வித்தியாலயத்தின் தேவைகளை கண்டறியும் நோக்குடன் ஷிப்லி பாறூக் பாடசாலைக்கு திடீர் விஜயம்

0
99

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்/மாவிலங்குதுறை விநாயகர் வித்தியாலயத்தின் தேவைகளை கண்டறியும் நோக்குடன் கடந்த வியாழக்கிழமை (11.02.2016) பாடசாலைக்கு திடீர் விஜயமொன்றை கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கொண்டிருந்தார்.

அதன்போது உடனடியாக தேவையாக பிரிண்டர் இயந்திரமொன்றை பெற்றுத்தருமாறு பாடசாலை அதிபரினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளினை தனது சொந்த நிதியிலிருந்து பிரிண்டர் இயந்திரமொன்றை வழங்குவதாக வாக்குருதியளித்திருந்தார். அதன் பிரகாரம் இன்று வியாழக்கிழமை (18.02.2016) பிரிண்டர் இயந்திரமொன்றை உத்தியோகபூர்வமாக பாடசாலை அதிபரிடம் கையளித்தார்.

இந் நிகழ்வில் கருத்து தெரிவித்த அவர் மலர்ந்திருக்கும் இந்த நல்லாட்சியில் இன மத வேறுபாடுகளின்றி மனித நேயத்துடன் அனைவரும் பாடுபடவேண்டும், மேலும் நகர்ப்புறங்களில் இருக்கும் பாடசாலைகளை விட கிராமப்புறங்களில் இருக்கும் பாடசாலைகளை மேம்படுத்த கல்வி அமைச்சு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், எனவும் அதற்காக மாகாண சபையில் பரிந்துரை செய்வதாக குறிப்பிட்டார்.

மேலும் இப்பாடசாலையில் இருக்கும் விஞ்ஞான ஆய்வு கூட கட்டிடத்தினைதான் அனைத்து விதமான கூட்டங்களுக்கும் பயன்படுத்துகின்றனர். இக் கட்டிடத்தில் மின்விசிறிகள் இல்லாமல் இருப்பதனை கண்ணுற்ற அவர் தனது சொந்த நிதியிலிருந்து மூன்று மின்விசிறிகளை மிகவிரைவில் வழங்குவதாக வாக்குருதியளிதார்.

LEAVE A REPLY