காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியை ஷிப்லி பாறூக் பார்வை யிட்டார்

0
185

காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியில் அமைத்திருக்கின்ற வடிகான் பல வருட காலமாக மிகவும் மோசமான முறையில் பாதிப்படைந்து ஒழுங்கற்று இருப்பதனால் மழைநீர், கழிவு நீர் வடிந்தோட முடியாமல் நீர் தேங்கி நின்று சூழலையும் அப்பிரதேசத்தினையும் பாதிக்கின்றது.

மேலும் டெங்கு போன்ற பாரிய நோய்களை உண்டாக்க கூடிய நுளம்புகள் பரவக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றமையினாலும், அந்த வடிகானையண்டி பல மலசலகூடங்கள் அமையப்பெற்று இருப்பதனால் மழைகாலங்களில் அதன் நீர் அனைத்து இடங்களிலும் பரவி நிலத்தடி நீரினை பாதிப்படையச் செய்வதுடன் பல்வேறு நோய்கள் உருவாகின்றது.

இவ்வாறு கடந்த வருடம் டெங்கு நோயினால் ஒரு குழந்தை மரணித்துள்ளது, மேலும் மழைகாலங்களில் வெள்ளம் ஏற்பட்டு மழைநீர் வீடுகளுக்குள் செல்கின்றது அத்துடன் பாம்புகள், பல்வேறு விஷஜந்துக்கள் வீடுகளில் நுழைவதனால் சிறுகுழந்தைகள், வயோதிபர்கள் போன்றோருக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கின்றது.

இவ்வாறாக அப்பிரதேச மக்கள் பல்வேறு பதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளனர், இதனை கருத்திற்கொண்டு அதனை சீர்செய்யும் முகமாக இன்று வியாழக்கிழமை (18.02.2016) கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர் திரு. S. இன்பராஜா அவர்களையும், நகரசபை செயலாளர் J. சர்வேஸ்வரன், மற்றும் உயரதிகாரிகள் பலரை உரிய இடத்திற்கு அழைத்து சென்று அங்குள்ள நிலைமைகளை காண்பித்ததுடன் அப்பிரதேச மக்களின் அவல நிலைகளையும் காண்பித்து வடிகானை விரைவாக சீர் செய்ய பணிப்புரைவிடுத்ததுடன் அதனை வடிவமைப்பதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.

01d9ff4c-0b47-439c-a03e-d25a45502abb 2d0ed8e4-c7df-40d6-b90e-7f8d27e2dbbb 23ea4bb9-f4bc-4230-814d-4b76798efc26 67bab0bb-4284-4646-a663-59e2811304d8 a5ed767d-0016-4bf5-831e-5f60f0c64bd4 ab2f2234-6567-4f8f-8159-40cb8274be53 d8227c99-fabc-4e40-be85-c76c1225f5eb e6868a89-d694-4c84-a7f6-c24fcd56a686 ed30f20c-f9d6-4eee-8578-ba86e8053b41 f685a6b3-934c-4554-b48c-c9f35dd3c3fd

LEAVE A REPLY