கானா நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து: 53 பேர் பலியான சோகம்

0
195

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 53 பேர் பலியானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

வடக்குப்பகுதி நகரமான டாமேல் நோக்கி சென்ற அரசுப் பேருந்து, நெடுஞ்சாலையில் சென்றபோது தக்காளி ஏற்றி வந்த லாரியுடன் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தது. பயணிகளில் பலர் இருக்கையுடன் நசுங்கி பலியாகி உள்ளனர்.

படுகாயங்களுடன் உயிருக்குப் போராடியவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்ப்டடு வருகிறது.

நேற்று மாலை நடந்த இந்த விபத்தில் 53 பேர் பலியாகியிருப்பதாகவும், 23 பேர் உயிர்பிழைத்திருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY