தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்தக்கம் வென்ற அஸ்ரபிற்கு சொந்த ஊரில் வரவேற்பு

0
211

அண்மையில் இடம்பெற்ற தெற்காசிய நாடுகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் இலங்கை அணி சார்பாக பொத்துவிலை பிறப்பிடமாகக் கொண்ட லத்தீப் முகம்மட் அஸ்ரப் 100 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் முதலிடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தையும், 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலத்தையும் பெற்று முழு இலங்கைக்கும் பொத்துவில் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

போட்டிகள் அனைத்தும் முடிவடைந்து நாடு திரும்பிய வீரரை இன்று அவரது சொந்த ஊரான பொத்துவில் பிரதேசத்தில் அனைத்து விளையாட்டு கழகங்கள் மற்றும் சமூக அமைப்புக்களின் பங்களிப்புடன் பொத்துவில் முழுதும் வாகன பவணியாக ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டார்.

கடந்த 2014ம் ஆண்டு இந்தியாவில் இடம்பெற்ற லுசிபோனியா மெய்வல்லுனர் போட்டியிலூம் தங்கப்பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.

எம்.எஸ்.சம்சுல் ஹுதா

00eefacb-b680-492f-a759-37be744d4e1d 57b7303e-b46c-4b65-a0a4-50271115e9cb d57f6626-9965-4ac8-8138-70dfc035d188

LEAVE A REPLY