நாவிதன்வெளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

0
155

நாவிதன்வெளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு இணைத் தலைவருமான எம்.ஜ.எம்.மனசூர் தலைமையில் நாவிதன்வெளி பிரதேச கலாசார மத்திய நிலையத்தில் இன்று (18) நடைபெற்றது.

இதன்போது சுகாதாரம், கல்வி, வீதி அபிவிருத்தி, நீர்பாசனம், விவசாயம், வீடமைப்பு, பொலிஸ், தபால் சேவை, மீன்பிடி, இலங்கை மின்சார சபை, விலங்கு வேயளாண்மை, போக்குவரத்து, பிரதேச சபை, சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி, காணி போன்ற விடங்களில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சிணைகள் இணைங்கானப்பட்டு ஓரு சில பிரச்சிணைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்கப்பட்டதுடன் ஏனைய பிரச்சினைகளுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ரீ.கலையரசன், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன், கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் டீ.கே.ஹேமந்த, பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரனின் பிரத்தியோக செயலாளர் ஜீ.விநாயக மூர்த்தி, நாவிதன்வெளி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் மோகன குமார், திணைக்களங்களின் தலைவர்கள், அமைப்புக்களின் பிரதிநிதிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலைகளின் அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

எம்.எம்.ஜபீர்

LEAVE A REPLY