சரத்பொன்சேகாவிற்கு பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கியமையை எதிர்த்து வழக்கு

0
203

முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகாவிற்கு பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கியமையை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையம் உச்ச நீதிமன்றில் இன்றைய தினம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.

சரத் பொன்சேகாவிற்கு பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கியமை சட்டவிரோதமானது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல் சாசனத்தின் 99ம் சரத்தினை மீறும் வகையில், சரத் பொன்சேகா தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2015ம்ஆண்டுக்கான பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சில் சமர்ப்பித்த தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியலில் சரத்பொன்சேகாவின் பெயர் உள்ளடக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கியமை நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையிலானது என சுட்டிக்காட்டியுள்ளது.

சரத் பொன்சேகாவின் நியமனத்திற்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்குமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சரத்பொன்சேகா பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுவதனை தடுக்க இடைக்கால தடையுத்தரவு விதிக்குமாறும் கோரிக்கை விடுக்க்பபட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம், முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா, சபாநாயகர் கரு ஜயசூரிய, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க திஸாநாயக்க, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

சரத் பொன்சேகா கடந்த 2015ம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY