(Video) Shane Warne தலையில் கடித்த அனகொண்டா!

0
138

அவுஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னேவை அன்கொண்டா பாம்பு தலையில் கடித்ததில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஷேன் வார்னே ”I’m A Celebrity … Get Me Out Of Here” என்ற அவுஸ்திரேலிய ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார்.

அதில் எலி மற்றும் பாம்புகள் நிறைந்த பெட்டியில் தலையை விட வேண்டும் என்பது சவால்.

இது தொடர்பாக வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், எலிகள் நிறைந்த பெட்டிக்குள் தலையை விட்ட ஷேன் வார்னே, அடுத்து பாம்புகள் நிறைந்த பெட்டிக்குள் தலையை விடுகிறார்.

அப்போது ஒரு அன்கொண்டா வகை பாம்பு அவரது தலையை பதம் பார்ப்பது போன்று அந்த வீடியோ முடிகிறது.

இது பற்றி அந்த தொலைக்காட்சியின் ஊழியர் ஒருவர் கூறுகையில், “அந்த பெட்டியில் பல வகை ஆக்ரோஷமான பாம்பு வகைகள் இருந்தன. ஆனால் அவைகளுக்கு விஷம் கிடையாது. ஆனால் கொடூரமாக கடிக்கும்.

இதில் ஒரு அன்கொண்டா வகை பாம்பு அவரது தலையில் நன்றாக கடித்து விட்டது. இந்த வகை பாம்புகளுக்கு 100 பின்புற எதிர்கொள்ளும் பற்கள் ஊசி போன்று இருக்கும்.

இதில் காயமடைந்த வார்னே மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY