புதிய வரலாறு படைத்தார் மெஸ்ஸி

0
154

அர்ஜென்டினா கால்பந்து அணியின் தலைவர் லியோனல் மெஸ்ஸி கிளப் போட்டிகளில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான மெஸ்ஸி, ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் ஸ்பெயினின் லா லிகா போட்டியில் ஸ்போர்ட்டின் கிஜோன் அணிக்கு எதிராக அவர் 2 கோல்கள் அடித்தார்.

இதன் மூலம் அவர் லா லிகா போட்டியில் 300 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இந்த பட்டியலில் மறைந்த ஸ்பெயின் வீரர் டெல்மோ ஜாரா (251 கோல்கள்), போர்த்துக்கல் அணியின் ரொனால்டோ (246 கோல்கள்) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

லா லிகா போட்டியில் 334 ஆட்டத்தில் விளையாடியுள்ள மெஸ்ஸி மொத்தமாக 301 கோல்கள் அடித்துள்ளார்.

LEAVE A REPLY