இலங்கை – ரஷ்யாவுக்கு இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து!

0
145

வெகுசன தொடர்பாடல் துறையில் ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று அண்மையில் (11) மொஸ்கோ நகரில் வைத்து கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இருநாடுகளுக்குமிடையிலுள்ள நீண்ட கால கலை கலாசார உறவுகளை பலப்படுத்தும் நோக்கில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் வஜிர நாரம்பனாவ, மற்றும் ரஷ்ய நாட்டின் தொலைத் தொடர்பாடல் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் Nikolay Nikiforov வினால் இவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

சுதந்திரம், சமத்துவம், நல்லிணக்கம், உள்நாட்டு அலுவல்கள் தொடர்பில் இருநாடுகளுக்குமிடையிலான பரஸ்பர நட்புறவினை அதிகரிக்கும் வகையில் இவ் ஒப்பந்தம் வழிவகுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 05 வருட கால எல்லையை கொண்டுள்ள இவ் புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் தத்தமது தொடர்பாடல் துறைகளை மேலும் விஸ்தரித்து கொள்ள வழிசமைக்கும்.

ரஷ்ய நாட்டின் தொலைத் தொடர்பாடல் மற்றும் வெகுசன ஊடகத்துறை பிரதியமைச்சர்களான Rashid Ismailov, மற்றும் Alexey Volin, இலங்கையின் ரஷ்யாவுக்கான தூதுவர் கலாநிதி சமன் வீரசிங்க, மற்றும் ரஷ்யாவின் இலங்கைக்கான தூதுவர் Alexander Karchava ஆகியோரும் இந்நிகழ்வில் உடனிருந்தனர்.

LEAVE A REPLY