இலங்கையை தோல்வியடைய செய்து மீண்டும் இந்தியா அபார வெற்றி

0
153

இலங்கை மகளிர் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா – இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நேற்று நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தனர்.

இதனால் அந்த அணியால் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 178 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

அதிகபட்சமாக சுரங்கிய 43 ஓட்டங்களையும், வீரக்கொடி 37 ஓட்டங்களையும் எடுத்தனர். இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீப்தி ஷர்மா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் தொடர்ந்து ஆடிய இந்திய அணி 43.1 ஓவர்களிலே 4 விக்கெட்டுக்கு 179 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

அணித்தலைவர் மிதாலி ராஜ் 53 ஓட்டங்களும், மந்தனா 46 ஓட்டங்களும், ஹர்மன்பிரீத் கவுர் 41 ஓட்டங்களும் விளாசினர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

4 விக்கெட்டுகள் வீழ்த்திய தீப்தி ஷர்மா ஆட்டநாயகியாக தெரிவு செய்யப்பட்டார்.

இவ்விரு அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.

LEAVE A REPLY