துப்பாக்கிதாரியின் கைபேசியை திறக்கச் செய்ய ஆப்பிள் மறுத்துவிட்டது

0
185

அமெரிக்காவின் சான் பேர்னாடினோ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருந்தவர்களில், ஒருவரின் கைத்தொலைபேசியில் உள்ள தகவல்களை ஊடுருவிப் பார்ப்பதற்கு உதவுமாறு, கலிஃபோர்னியா நீதிமன்றம், ஆப்பிள் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு விடுத்துள்ள உத்தரவை, ஆப்பிள் சட்டரீதியாக எதிர்கொள்ள உள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி டிம் குக், அமெரிக்க புலனாய்வு துறையினரின் இந்த கோரிக்கை, தமது நிறுவனத்தின் தொழில்நுட்ப தயாரிப்புகளினுள் அமெரிக்க புலனாய்வு நிறுவனமான, எஃப்.பி.ஐ முறையற்ற வகையில் உள் நுழைய வழிவகுப்பதுடன், தமது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடும் என்றார்.

நீதிமன்றின் உத்தரவினை நிறைவேற்றுவதற்கு, ஆப்பிள், தாம் தயாரித்த எந்த ஒரு ஸ்மார்ட்ஃபோனையும் திறக்க செய்ய ஏற்புடைய மென்பொருட்களை உருவாக்க வேண்டும் என, தெரிவித்த அவர் இது ஒரு அபாயகரமான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்றார்.

 

LEAVE A REPLY