உலக சந்தையில் கனிய எண்ணெயின் விலை வீழச்சி; இலங்கையில் குறைவடையும் சாத்தியமில்லை

0
124

உலக சந்தையில் கனிய எண்ணெயின் விலை குறைவடைந்துள்ள போதிலும் குறித்த எண்ணெய் இது வரை தமக்கு கிடைக்கவில்லை என இலங்கை பெற்றோலிய கூடடுத்தாபனம் தெரிவித்துள்ளது.

புதிய விலை சூத்திரம் ஒன்று தயாரிக்கப்பட்டு அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ. சி. ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

எண்ணெய் விலையை குறைப்பது தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விலை குறைக்கப்பட்டுள்ள எண்ணைய் நாட்டுக்கு கொண்டு வரும் பட்சத்தில் அதனை உரிய வகையில் பிரித்து விநியோகிப்பதற்கு 45 தொடக்கம் 60 நாட்கள் செல்லும் எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தின் தலைவர் கூறியுள்ளார்.

எனினும் நாட்டில் எண்ணை விலையை அரசாங்கமே தீர்மானிப்பதாகவும், அமைச்சரவை அனுமதிக்காக தமது விலை சூத்திரம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
-NF-

LEAVE A REPLY