நல்லாட்சி அரசாங்கத்திலாவது கிராமங்கள் தொடர்ந்து புறகணிக்கப்படுவதும் நகரங்கள் அழகுபடுத்தப்படுவதும் மாறவேண்டும்: ஷிப்லி பாறூக்

0
187

கிழக்கு மாகணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவுக்குற்பட்ட ஒல்லிக்குளம் கிராம பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களை சந்தித்து அங்குள்ள குறைநிறைகளை கேட்டறியும் முகமாக திடீர் விஜயமொன்றை புதன்கிழமை (17.02.2016) அன்று மேற்கொண்டார்.

இவ்விஜயத்தின்போது கருத்து தெரிவித்த அவர், ஒல்லிக்குளம் கிராமமானது யுத்ததினால் பாதிக்கப்பட்டதுடன், வறுமைகோட்டின் கீழ் வாழ்கின்ற அதிகமான மக்களை கொண்ட ஓர் எல்லைக் கிராமமாகும். இவ்வாரன எல்லைக் கிராமங்கள் நல்லாட்சியிலும் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுவதும் நகர்புரங்கள் எழில்பெறுவதும் ஏற்றுக்கொள்ளமுடியாத விடயமாகும் என தெரிவித்தார்.

அத்துடன் அம்மக்களின் இருப்பிடங்களுக்கு சென்று நேரடியாக அவர்களது நிலைமைகளை அவதானித்ததுடன் அவர்களது குறைகளை கேட்டறிந்தார். அத்துடன் அவர்களது பொதுத் தேவைகள் நிறைவு செய்யப்படாமல் இருப்பதனை அவதானித்தார். இக்கிராமத்தில் ஒழுங்கற்ற வீதிகளாலும், இரவு நேரங்களில் தெரு மின்விளக்குகள் இன்மையினாலும் மக்கள் தமது பிரயாணங்களை மேற்கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர். அத்துடன் இரவு நேரங்களில் பாம்புகள் மற்றும் விஷ ஜந்துக்கள் போன்றவைகளின் நடமாட்டங்கள் அதிகமாக காணப்படுகின்றது. அதன் அபாயத்தினால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து மக்கள் வாழ்கின்றனர்.

அத்துடன் இங்கு வாழ்கின்ற அதிகமான மக்கள் வறுமைகோட்டின் கீழ் வாழ்கின்ற படியினால் அவர்களது வீடுகள் தகரங்களினாலும், ஓலைகளினாலும், அறைகுறையாக அமையப்பெற்ற வீடுகளாகவே காணப்படுகின்றது.

அத்துடன் அவர்களது அன்றாட வாழ்க்கையினை கொண்டு நாடாத்துவதற்கு மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்ற நிலைமையில் அவர்களினால் தனிப்பட்ட முறையில் தெரு மின் விளக்குகளை போட முடியாதுள்ளது. இந்நிலைமை தொர்பாக உடனடியாக மின்சாரசபையின் பொறியியளாலரை தொடர்பு கொண்டு கேட்டதற்கு அவர் புதிதாக தெரு மின்விளக்குகள் இடுவதற்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆகையினால் தங்களால் ஏதும் செய்யமுடியாது என தெரிவித்தார்.

இந் நிலைமையினை கண்ணுற்ற அவர் அம்மக்களின் இந்நிலைமையை நிறைவு செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு தீர்வினைப் பெற்று கொடுப்பதாக கிழக்கு மாகணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

-எம்.ரீ.ஹைதர் அலி

LEAVE A REPLY