மண்முனை வடக்கு பிரதேச செயலக கிராம மட்ட சிறுவர் கண்காணிப்புகுழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை விநியோகம் வழங்கும் நிகழ்வு

0
129

மட்டக்களப்பு மண்முணை வடக்கு பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள ஜெயந்திபுரம் கிராமசேவை உத்தியோகத்தர் பிரிவில் இயங்கி வருகின்ற 14 கிராம மட்ட சிறுவர் கண்காணிப்பு குழு உறுப்பினர்களுக்கான உறுப்பினர் அடையாள அட்டைகள் புதன்கிழமை 17.02.2016 விநியோகிக்கப்பட்டன.

பிரதேச செயலாளர் வி. தவராஜா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இப்பகுதியிலுள்ள சிறுவர்களின் கண்காணிப்பிலும் நலன்சார்ந்த விடயங்களிலும் இந்தகிராம மட்ட சிறுவர் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் ஈடுபடுவதற்கு வசதியாக இந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டதாக பிரதேச செயலாளர் தவராஜா தெரிவித்தார்.

சிறுவர் துஷ்பிரயோகங்களையும் நெறிபிறழ்வான நடத்தைகளையும் சீரமைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது மேற்கொள்ளப்படுகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இன் நிகழ்வின் போது சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் சி. உதயராஜ் உட்பட ஜெயந்திபுரம் கிராமசேவகர் பிரிவில் இயங்கிவருகின்ற கிராமமட்ட சிறுவர் கண்காணிப்பு குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களும் பங்குபற்றினர்.

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

LEAVE A REPLY