தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கற்கைகளுக்கான பதிவுகள் ஆரம்பம்

0
479

இஸ்லாமிய மற்றும் அறபு மொழிக் கற்கைகளுக்கான பதிவுகள் நேற்று (17) புதன்கிழமை ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்றன.

தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இஸ்லாமிய மற்றும் அறபு மொழிக் கற்கைகளைத் தொடர்வதற்காக விருப்பம் தெரிவித்து 430 விண்ணப்பித்திருந்தனர்.

மேற்படி இரு கற்கைகளுக்குமாக நேற்று இடம்பெற்ற நேர்முகத்தேர்வு பரிசீலனையின்போது நேரடியாக சமுகமளித்திருந்த 385 பேர் தம்மைப் பதிவு செய்து கொண்டதாக தென்கிழக்குப் பல்கலைக் கழக இஸ்லாமிய மற்றும் அறபு மொழித்துறைப் பீடாதிபதி அஷ்ஷெய்ஹ் எஸ்.எம்.எம். மஸாஹிர் தெரிவித்தார்.

இவர்களுக்கான கற்கைகளுக்குரிய சகல ஏற்பாடுகளும் இடம்பெற்று முடிந்ததும் மிக விரைவில் கற்கைகள் ஆரம்பமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வர்த்தக முகாமைத்துவம், மற்றும் முகாமைத்துவமும் தகவல் தொழிநுட்பமும் பாடநெறிகளுக்கான நேரடியான பதிவுகள் இம்மாதம் 24 மற்றும் 29 ஆம் திகதிகளில் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இத்துறைகளைப் பயில்வதற்கு விருப்பம் தெரிவித்து 271 பேர் விண்ணப்பித்திருக்கின்றார்கள்.

மேலும், பிரயோக விஞ்ஞானக் கற்கைகளுக்கான நேரடிப் பதிவு பெப்ரவரி 29 ஆம் திகதி தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரயோக விஞ்ஞானக் கற்கையைப் பயில்வதற்கு 166 பேர் விண்ணப்பித்திருக்கின்றார்கள்.

கடந்த 15 ஆம் திகதி தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கலை கலாசாரக் கற்கைகளுக்கான பதிவுகள் இடம்பெற்றிருந்தன. இத்துறைகளுக்கு 192 பேர் பதிவு செய்துள்ளனர்.

தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பரீட்சைகள் பிரிவு, அலுவலர்கள் மற்றும் மாணவர் நலனோம்புப் பிரிவு என்பன இணைந்து மாணவர் பதிவுக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளன.

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

a d

LEAVE A REPLY