கஞ்சாவுடன் முதியவர்கள் இருவர் உட்பட மூவர் கைது

0
239

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மீராகேணி, முறக்கொட்டான்சேனை மற்றும் கோரகல்லிமடு ஆகிய கிராமங்களில் உள்ள வீதிகளில் கஞ்சாவுடன் நடமாடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாகக் கூறப்பட்ட இந்த மூன்று கிராமங்களுக்கும் சென்ற பொலிஸ் ரோந்துப் பிரிவினர் அங்கிருந்து கஞ்சாவுடன் நேற்று (17) புதன்கிழமை மூவரைக் கைது செய்தனர்.

மீராகேணியிலுள்ள வீதியில் வைத்து கைது செய்யப்பட்ட 66 வயதான முதியவரிடமிருந்து 8000 மில்லி கிராம் கஞ்சாவும், முறக்கொட்டான்சேனைக் கிராமத்தில் கைதான 62 வயதான வயோதிபரிடமிருந்து 3800 மில்லி கிராம் கஞ்சாவும், கோரகல்லிமடுவில் கைதான 26 வயது நபரிடமிருந்து 4810 மில்லிகிராம் கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளன.

இச்சம்பவங்கள் பற்றி பொலிஸார் மேலும் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

LEAVE A REPLY