மனித வரலாற்றை பதிவு செய்யும் அளவுடைய CD உருவாக்கம்

0
97

இதுவரை இல்லாத அளவு 360 டெராபைட் மின்னணுத் தகவல்களுடன் 1,380 கோடி ஆண்டுகளுக்கு மேல் நிலைத்திருக்கக் கூடிய குறுந்தகடை பிரிட்டன் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

பிரிட்டனைச் சேர்ந்த செளதாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் கண்ணாடி மின்னணுவியல் ஆய்வு மையம் இந்த குறுந்தகட்டை உருவாக்கியுள்ளது.

நானோ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட கண்ணாடி இழைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தக் குறுந்தகடு, சிறிய நாணயத்தின் அளவே இருந்தாலும், இதில் 360 டெராபைட் (3.6 லட்சம் ஜிகாபைட்) அளவிலான மின்னணுத் தகவல்களைப் பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்து பரிமாணப் பதிவு முறை மூலம், ஒரு விநாடியின் ஆயிரங்கோடி கோடி கோடியின் ஒரு பகுதி நேரத்துக்கு ஒருமுறை தகவல்களைப் பதிவு செய்யும் அதிவேகத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்த குறுந்தகட்டில் தகவல்கள் பதிவு செய்யவும், மீண்டும் பெறவும் முடியும்.

இதில் பதிவு செய்யப்பட்ட தகவல் பல கோடி ஆண்டுகளுக்கு அழியாமல் இருக்கும் என்பதால், வரலாற்று ஆவணங்களைப் பாதுகாக்கும் துறையினருக்கு இந்த குறுந்தகடுகள் வரப்பிரசாதமாக அமையும் எனக் கூறப்படுகிறது.

(Thinakaran)

LEAVE A REPLY