சிவப்பு அட்டை காண்பித்த நடுவரை சுட்டுக் கொன்றார் வீரர்

0
204

ஆர்ஜன்டீனா கால்பந்து போட்டி ஒன்றில் சிவப்பு அட்டை காண்பித்ததற்காக வீரர் ஒருவர் மத்தியஸ்தரை சுட்டு கொன்றுள்ளார். இவ்வாறு தாக்குதல் நடத்திய 25 வயது வீரரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

போட்டி மத்தியஸ்தரான 48 வயது செசல் பிளோரஸின் தலை, நெஞ்சு மற்றும் கழுத்து பகுதியில் மூன்று துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன. இதன்போது வீரர் ஒருவரும் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி இருப்பதோடு அவருக்கு உயிராபத்து இல்லை என கூறப்பட்டுள்ளது.

ஆர்ஜன்டீனாவின் லீக் கால்பந்த போட்டி ஒன்றின்போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த அந்த வீரர் வெளியே சென்று விட்டு மீண்டும் துப்பாக்கியுடன் களத்திற்கு திரும்பியுள்ளார். யாரும் எதிர்பாராத வகையில், மத்தியஸ்தர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி இருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு நடந்த கழக போட்டி ஒன்றில் மஞ்சள் நிற அட்டை காட்டியதற்காக, மத்தியஸ்தரை வீரர் தாக்கியதால் அந்த போட்டி கைவிடப்பட்டது. ஆர்ஜன்டீனாவில் கால்பந்தாட்ட களத்தில் ஏற்படும் வன்முறையை சமாளிக்க முடியாமல் அந்நாட்டு அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

(Thinakaran)

LEAVE A REPLY