அம்பாறை – அக்கரைப்பற்று கடலில் நீராடச் சென்ற ஹில்மி முஜீப் (வயது 16) என்ற மாணவனைக் காணவில்லை

0
222

அம்பாறை, அக்கரைப்பற்று கடற்கரைப் பிரதேசத்தில் இன்று நண்பகல் கடலில் நீராடச் சென்ற மாணவன் காணாமல் போயுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று, 13ஆம் பிரிவைச் சேர்ந்த அக்கரைப்பற்று அல்-பாத்திமியா வித்தியாலத்தில் தரம் 11இல் கல்வி பயிலும் ஹில்மி முஜீப் (வயது 16) என்ற மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

இம்முறை க.பொ.த சாதாரண தரம் பரீட்சை எழுதவிருந்த மேற்படி மாணவன், தற்போது பாடசாலை பிரதேச விளையாட்டுப் போட்டி நடைபெற்றுவருவதனால் அப்பயிற்சியை முடித்துக்கொண்டு சக மாணவர்களுடன், அப்பிரதேசத்திலுள்ள கடலுக்கு நீராடச் சென்ற போது காணாமல் போயுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேற்படி காணாமல் போயுள்ள மாணவனைத் தேடும் பணியில் கடற்படையினரும், அப்பிரதேச மீனவர்களும் ஈடுபட்டுவருவதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY