தீவிரவாதத்துடன் எம்மை தொடர்புபடுத்த வேண்டாம்: பொது பல சேனாவுக்கு உலமா சபை பதில்

0
243

ஐ.எஸ். போன்ற இஸ்­லா­மிய போத­னை­க­ளுக்கு முர­ணாக செயற்­படும் தீவி­ர­வாத அமைப்­பு­க­ளோடு எவ­ரா­வது தொடர்­பு­பட்டால் நாம் அதனை மிகவும் வன்­மை­யாகக் கண்­டிக்­கிறோம்.

இவ்­வா­றான அமைப்­பு­க­ளுக்கும் இஸ்­லா­மிய அடிப்­படை விழு­மி­யங்­க­ளுக்கும் எவ்­வித தொடர்பும் கிடை­யாது என்­பதை உறு­தி­யாகக் குறிப்­பி­டு­கின்றோம் என அகில இலங்கை ஜம்­இ­யத்துல் உலமா சபை தெரி­வித்­துள்­ளது.

எவ­ரா­வது தனி நபர் தீவி­ர­வா­தத்­துடன் தொடர்­பு­டை­ய­வராக இருந்தால் அவர்­க­ளு­க்கு எதி­ராக உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு அர­சாங்­கத்­திடம் வேண்­டு­கோளும் விடுத்­துள்­ளது.

உலமா சபையை தீவி­ர­வா­தத்­துடன் தொடர்பு­ப­டுத்­து­வதை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது.

இஸ்லாம் மனித இனத்­திற்கு கருணை காட்டும் மார்க்­க­மாகும். அதன் அடிப்­படை போத­னை­க­ளாக சமா­தானம், அமைதி, பாது­காப்பு மற்றும் சகோ­த­ரத்­துவம் போன்­றன காணப்­ப­டு­கின்­றன. ஒரு தனி மனி­த­னு­டைய கொலையை முழு மனித சமூ­கத்­தி­ன­ரி­னதும் கொலை­யாக கரு­து­கின்­றது என்றும் தெரி­வித்­துள்­ளது.

அகில இலங்கை ஜம்­இயத்துல் உலமா சபையை தீவி­ர­வா­தத்­துடன் தொடர்­ப­ப­டுத்­தி­யுள்­ள­மைக்கு பதி­ல­ளிக்­கும்­வ­கையில் அகில இலங்கை ஜம்­மி­யத்துல் உலமா சபையின் பொதுச் செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;
‘இஸ்லாம் போதிக்­கின்ற சமா­தானம் அமைதி மற்றும் சகோ­த­ரத்­துவம் என்­பன சாதி, மத பேத­மின்றி அனைத்து மனி­தர்­க­ளுக்கும் பொது­வா­ன­வை­யாகும்.

தீவி­ர­வாத செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­தலை இஸ்லாம் வன்­மை­யாகக் கண்­டிக்­கி­றது. குழப்பம் விளை­வித்தல், கடும் போக்­காக நடந்து கொள்­ளுதல், கொலை செய்தல் ஆகி­ய­வற்றை பெரும்­பா­வங்­க­ளா­கவும் குற்­றங்­க­ளா­கவும் இஸ்லாம் கரு­து­கி­றது.

2014.7.6 ஆம் திகதி இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­ப­னத்தில் ஐ.எஸ். அமைப்பைக் கண்­டித்து அறிக்­கை­யொன்­றி­னையும் உலமா சபை வெளி­யிட்­டுள்­ளது.

முஸ்­லிம்­க­ளா­கிய நாம் எமது தாய் நாட்டில் பல நூற்­றாண்­டு­க­ளாக நாட்டுப் பற்­று­டனும் ஏனைய சமூ­கங்­க­ளுடன் ஒற்­று­மை­யா­கவும் சக­வாழ்­வு­டனும் வாழ்ந்து வரு­கின்றோம்.

தாய்­நாட்­டுக்கு பாதிப்பு ஏற்­படும் செயற்­பா­டு­க­ளிலும் இலங்­கையின் சமூ­கங்­க­ளுக்கு இடை­யி­லான ஒற்­று­மையை சீர்­கு­லைக்கும் செயற்­பா­டு­க­ளிலும் இந்­நாட்டு முஸ்லிம் சமூகம் ஒரு­போதும் ஈடு­படப் போவ­தில்லை என்­பதை உறு­தி­யாகக் கூறிக் கொள்­கிறோம்.

பொது­ப­ல­சேனா அமைப்பின் நிறை­வேற்றுப் பணிப்­பா­ளரின் கூற்று இந்­நாட்டு முஸ்­லிம்­களை கவ­லை­ய­டையச் செய்­துள்­ளது. பொய்­யான கூற்­றுக்கள் வெளி­யி­டப்­ப­டு­வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

2014 ஆம் ஆண்­டி­லேயே உலமா சபை ஐ.எஸ். தொடர்பில் தனது நிலைப்­பாட்டை பகி­ரங்­கப்­ப­டுத்­தி­யுள்ள நிலையில் இவ்­வா­றான குற்­றச்­சாட்­டுகள் அடிப்­ப­டை­யற்­ற­ன­வாகும் றனவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-Vidivelli-

LEAVE A REPLY