பாலமுனை இக்ரஃ பாலர் பாடசாலையினை பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் நேரில் சென்று பார்வை

0
171

பாலமுனை இக்ரஃ பாலர் பாடசாலையின் நிலைமைகளை பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அண்மையில் நேரில் சென்று பார்வையிட்டார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பாலமுனைப் பிரதேச செயற்குழு உறுப்பினர்களின் வேண்டு கோளுக்கமைவாகவே இந்த விஜயம் மேற்கொள்ப்பட்டது.

பாலமுனைப் பிரதேசத்தில நீண்ட காலமாக இயங்கி வரும் இப்பாலர் பாடசாலையில் தற்போது 42 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

இதில் பெரும்பான்மையான மாணவர்கள் பொருளாதாரக் கஸ்டம் நிறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களாவார்கள்.

இப்பாடசாலை இயங்கும் கட்டிடத்தின் கூரை மிக நீண்ட காலமாக சேதமடைந்து காணப்படுகின்றது இதன் காரணமாக மழை காலங்களில் மாணவர்களின் ஆக்க வேலைகள் சேதமடைந்து விடுகின்றன. அத்தோடு, மின்சார வசதியும் குடிநீர் வசதியும் இன்றி இப்பாடசாலையின் மாணவர்களும், ஆசிரியைகளும் மிகுந்த சிரமம்படுகின்றனர்.
இந்த விபரங்களை நேரில் கேட்டறிந்த பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் மிக விரைவில் மின்சார வசதியைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.

அத்தோடு, ஏனைய பிரச்சினைகளுக்குமான தீர்வுகளை முடிந்தளவு விரைவாக பெற்றுத்தர முயற்சிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இவ்விஜயத்தின் போது NFGG யின் பாலமுனை பிரதேச செயற்குழு உறுப்பினர் சகோ. சியாட் அவ்களும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

LEAVE A REPLY