பலபிட்டிய சூடு; மற்றைய சாட்சியாளரும் மரணம்

0
155

பலபிட்டிய நீதிமன்றத்திற்கு சாட்சியமளிக்க வந்தபொழுது துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான இரண்டாமவர் இன்று (17) வைத்தியசாலையில் வைத்து மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விமானப்படையைச் சேர்ந்த வீரர் ஒருவரை கத்தியால் குத்தி காயப்படுத்தியமை மற்றும் கடந்த 2011 ஒக்டோபர் 19ஆம் திகதி பெந்தோட்டையிலுள்ள விடுதி ஒன்றின் பணியாளரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தமை உள்ளிட்ட வழக்குகளின் சாட்சியாளர்களே இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கானவர்களாவர்.

இன்றைய தினம் மரணமடைந்தவர் மீகெட்டுவத்தை சுமித்த தேரரின் வாகன சாரதியான ரசிக சமிந்த குமார என்பராவார்.

அத்துடன், இவ்வழக்கில் சுமித்த தேரரும் ஒரு சந்தேகநபர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் (16) மரணித்தவர், பியரத்ன எனும் சந்தேகநபராவார்.

இத்துப்பாக்கி பிரயோகம் தொடர்பிலான குற்றவாளிகளை கண்டறிய, விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

-Thinakaran-

LEAVE A REPLY