ரஷ்யாவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 7 பேர் பலி

0
142

ரஷ்யாவின் யரோஸ்லாவி நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

5 மாடிகளைக் கொண்ட இந்த கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பலர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்த 8 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டடம் மேலும் இடிந்து வீழும் அபாய நிலை காணப்படுவதால் அங்கிருந்த சுமார் 131 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY