உத்தேச அரசியல் யாப்பு மாற்றம் தொடர்பான மக்கள் கருத்து கணிப்பு

0
172

குருநாகலை மாவட்டத்திற்கான உத்தேச அரசியல் யாப்பு மாற்றம் பற்றிய பொதுமக்கள் கருத்து கணிப்பீடு குருநாகல் மாவட்ட செயலகத்தில் 2015.02.15, 16ஆந் திகதிகளில் (திங்கள், செவ்வாய்) மாவட்ட உதவி அரசாங்க அதிபர் தலைமையில் இடம் பெற்றது.

இக்கருத்து கணிப்பீட்டிற்கு முஸ்லீம்கள் சார்பாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் குருநாகலை மாவட்ட செயற்குழு உறுப்பினர்களான ஏ.எம். றிஸ்மி (காஸிமி), அப்துல்லாஹ், ஆஸீக், பஸாஹிர் (நளீமி) மற்றும் சட்டத்தரணி. தில்ஹாஜ் (நளீமி) போன்றோர் கலந்துகொண்டு கருத்துக்களை வழங்கினர்.

இதில் குறிப்பிடத்தக்க விடயமாக குருநாகலை மாவட்ட முஸ்லீம்களை பிரதிநிதித்துவம் படுத்தி நல்லாட்சிக்கான தேசிய முன்னணி  உறுப்பினர்கள் மாத்திரமே இதில் கலந்து கொண்டனர்.

எம்.ரீ.ஹைதர் அலி

a14a0655-aca2-467f-a869-93dbecb8e38a b507eedb-b520-4171-ab0b-2e5c4e8327fd e8ec9688-75a7-4bba-9f8f-1e121965729a ed9d655e-8534-4858-8941-5bbacdf190c2

LEAVE A REPLY