நாவிதன்வெளி பிரதேசத்தில் இளைஞர் சிரம சக்தி வேலைத் திட்டத்தினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் கையளிக்கும் நிகழ்வுகள்

0
158

நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து இளைஞர் சிரம சக்தி வேலைத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட பஸ் தரிப்பிடங்கள் மக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு நாவிதன்வெளி இளைஞர் சேவைகள் அதிகாரி என்.ஜெயராஜ் தலைமையில் இன்று (17) நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன், சம்மாந்துறை தொகுதி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.லிகிர்தன், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற பிரதி அமைச்சர் ரீ.சுதன், நாவிதன்வெளி பிரதேச செயலக பிரதம முகாமைத்துவ உதவியாளர் எம்.ஹஸன், நாவிதன்வெளி பிரதேச செயலக சிறுவர் நன்னடைத்தை உத்தியோகத்தர் எம்.மயூரன், கிராமசேவை உத்தியோகத்தர் பீ.டி.ஐயூப், சாளம்பைக்கேணி-02 கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஏ.எல்.ஜலீல், சாளம்பைக்கேணி-02 கிராம அபிவிருத்தி சங்க பொருலாளர் எம்.ஐ.ஹனீபா, உயர் அதிகாரிகள், இளைஞர் கழங்களின் பிரதிநிதிகள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது 6ஆம் கிராமம், சாளம்பைக்கேணி-02 மிலேனியம் இளைஞர் கழகம் மற்றும் மத்தியமுகாம்-05 அருள் இளைஞர் கழகம் ஆகிய இளைஞர் கழக பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட பஸ் தரிப்பிடங்கள் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எம்.எம்.ஜபீர்

LEAVE A REPLY