(Photos) காத்தான்குடி திருட்டுச் சம்பவம்; மூன்று சந்தேக நபர்கள் கைது; பொருட்களும் மீட்பு

0
252

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள வீடுகளில் கடந்த சில மாதங்களாக தொடராக இடம்பெற்ற கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை காத்தான்குடி பொலிசார் நேற்று (16) செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் மூன்று பேரையும் காத்தான்குடி பொலிசார் காத்தான்குடி டெலிகோம் வீதி மற்றும் ஆரையம்பதி கர்பலா மொடன் பாம் வீதிகளில் வைத்து கைது செய்துள்ளதுடன், கொள்ளையிடப்பட்ட பொருட்களையும் மீட்டுள்ளனர்.

கொள்ளையிடப்பட்ட பொருட்களில் 1 மோட்டார் சைக்கிள், துவிச்சக்கர வண்டி, கையடக்க தொலைபேசிகள், தங்க நகைகள் போன்றவை அடங்குகின்றன.

மேற்படி கொள்ளை சம்பவத்தில் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள 9 வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட 14 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை காத்தான்குடி பொலிசார் மீட்டுள்ளனர்.

பழுலுல்லாஹ் பர்ஹான்

1c007782-ac70-452d-8499-123e3c098746 7a38cbed-e9dc-428a-8b1e-3d8993e5eaae 852572f7-733d-4faa-9306-5e8d4cc2a1d0 c6393c55-062a-4c21-b41a-eff7b030b07c ce8c30b0-6a67-47a3-b5b7-e1b26df05ee8 e116e41e-32ad-42e1-a0ad-9ac80092911b ebaf0a70-29cc-4f5b-8ad2-329dc3b6c677

LEAVE A REPLY