காஞ்சாவுடன் சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற பிக்குகள் கைது

0
234

அநுராதபுரம், சந்தலாங்காவ பிரதேசத்திலிருந்து சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற ஐந்து தேரர்களை, ஹட்டன் பொலிஸார் ஹெட்டன் குடாகம பிரதேசத்தில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை (16) இரவு 11 மணியளவில் கைதுசெய்துள்ளனர்.

ஹட்டன், குடாகம பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸார், வான் ஒன்றை நிறுத்தி சோதனைக்குட்படுத்திய போது, அதில் ஐந்து பிக்குகள் காவியுடையின்றி சிவில் உடையில் மது அருந்திய நிலையில் இருந்துள்ளனர். இவர்களில் ஒருவர் கஞ்சா வைத்திருந்தமையும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இந்த 5 பேரையும் கைது செய்த ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட பின் சம்மந்தப்பட்ட ஒரு பிக்குவை இன்று மதியம் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் 4 பௌத்த பிக்குகள் குறித்து, குறித்த விகாரையின் நாயக்க தேரர்க்கு அறிவித்ததன் பின் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

(ET)

LEAVE A REPLY