பாட­சாலைப் பரீட்­சைகள் தொடர்­பான கால அட்டவணை வெளியீடு

0
358

இலங்­கை ­ப­ரீட்சைத் திணைக்­களம் இவ்­வாண்டு நடத்­து­வ­தற்கு உத்­தே­சித்­துள்ள பாட­சாலைப் பரீட்­சைகள் தொடர்­பான திகதி, மாதம் என்­ப­வற்றை வெளி­யிட்­டுள்­ளது.

இதற்­க­மைய கல்விப் பொதுத்­த­ரா­தர உயர்தர பரீட்சை ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி ஆரம்­ப­மாகி ஓகஸ்ட் மாதம் 27 ஆம் திக­தி­வரை (ஞாயிறு, அரச விடு­முறை நாட்கள் தவிர்ந்த) நடை­பெ­ற­வுள்­ளது.

இப்­ப­ரீட்­சையின் செய்­முறைப் பரீட்சை ஒக்­டோபர் மாதம் 17 ஆம் திகதி முதல் ஒக்­டோபர் மாதம் 31 ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்­ளது.

தரம் 5 புல­மைப்­ப­ரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்­ளது.
பொது தகவல் தொழில்­நுட்­பப்­ப­ரீட்சை ஒக்­டோபர் மாதம் 16 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை இடம் பெற­வுள்­ளது.
கல்விப் பொதுத் தரா­தர சாதா­ரண தரப் பரீட்சை டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி ஆரம்­ப­மாகி டிசம்பர் மாதம் 17 ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்­ளது. (ஞாயிறு, அரச விடு­முறை தவிர்ந்த நாட்­களில்)

இப்­ப­ரீட்­சையின் செய்­மு­றைப்­ப­ரீட்சை 2017 பெப்­ர­வரி 23 ஆம் திகதி தொடக்கம் 2017 மார்ச் 6 ஆம் திக­தி­வரை (ஞாயிறு தவிர்ந்த) நடைபெறுமென பரீட்சை ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஸ்பகுமார அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY