லசந்த படுகொலை; இவர்களைத் தெரிந்தால் உடன் பொலிஸாருக்கு அறிவிக்கவும்

0
169

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக் குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்படும் இருவரின் உருவ மாதிரிகளை பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது.

குறித்த வழக்கின் சாட்சியாளர்கள் வழங்கிய தகவல்களின் பிரகாரம் இரு சந்தேகநபர்களின் உருவம் குற்றப் பதிவு பிரிவினரால் ஓவியமாக வரையப்பட்டுள்ளது.

இவ்விரண்டு சந்தேகநபர்கள் தொடர்பிலும் சரியான தகவல்கள் தெரியுமாயின், 071-8591753, 071-8591770, 077-3291500 ஆகிய அலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு அறிவிக்கமுடியும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் உதவி பொலிஸ் அதிகாரி, சட்டத்தரணி ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
பட விளக்கம்

முதலாவது சித்திரம்

35 வயது மதிக்கத்தக்கவர், உயரம் 5 அடி 8அங்குலம், கண்கள் கபிலநிறம், மாநிறத் தோற்றம் கொண்டவர்.

article_1455689398-Untitled-1

இல.2 சந்தேகநபர், 40 வயது மதிக்கத்தக்கவர், உயரம் 5 அடி 10 அங்குலம், பருமானான உடற்தோற்றங்கொண்ட பொது நிறமானவர்.

article_1455689425-Untitled-2

-ET-

LEAVE A REPLY