கிழக்கு மாகாண சபை நிருவாகத்திலுள்ள வைத்தியசாலைகள் தரமுயர்வு: மாகாண சுகாதார அமைச்சர்

0
140

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கிழக்கு மாகாண சபை நிருவாகத்திலுள்ள வைத்தியசாலைகள் சிலவற்றைத் தரமுயர்த்துவதற்கு தான் முன்மொழிந்த யோசனைகளை கிழக்கு மாகாண அமைச்சரவை வாரியம் ஒப்புதலளித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் புதன்கிழமை தெரிவித்தார்.

கிழக்கு மாகாண அமைச்சரவை வாரியம் செவ்வாய்க்கிழமை மாலை 16.02.2016 முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தலைமையில் மாகாண சபை முதலமைச்சர் செயலகத்தில் கூடியபோது இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண அபிவிருத்திகள் இவ்வருட ஒதுக்கீடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் முன் மொழிந்த யோசனைகளும் அமைச்சர் வாரியத்தின் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படடுள்ளது.

அந்த வகையில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலுள்ள சில வைத்திய சாலைகளை தரமுயர்த்த மாகாண அமைச்சரவை வாரியத்திற்கு முன்nடிமாழியப்பட்ட யோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் கீழுள்ளஅன்னமலை ஆரம்ப வைத்தியப்பிரிவை ’சீ’ தரத்துக்கும், மத்திய முகாமின் ‘சீ” தரத்தில் உள்ள வைத்தியசாலையை ‘பி” தரத்திற்கும்,
இறக்காமம் ‘சி’ தரத்திலான வைத்தியசாலையை ‘ஏ’ தரத்திற்கும்,ஆலங்குளம் ஆரம்ப சுகாதார வைத்திய பிரிவை ‘சி’ தரத்திற்கும், சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையை “ஏ’ தரவைத்தியசாலையாகவும், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் நிருவாகத்தின் கீழுள்ள சந்திவெளி ‘சி” தரத்திலான வைத்தியசாலையை ‘பி’ தரத்திற்கும், மையிலடித்தீவு ‘சி” தர வைத்தியசாலையை “ஏ’ தரத்திற்கும் தரமுயர்த்தப்பட்டுள்ளன.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தின் கஷ்டப் பிரதேசத்திலுள்ள இறக்கக்கண்டியில் மத்திய மருந்தகம் ஒன்றைப் புதிதாக அமைக்கவும் அமைச்சரவை வாரியம் முழு அனுமதி வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்

LEAVE A REPLY