ஆங்கில, ஆயுர்வேத, யூனானி மருந்துகளை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள ஹெல்த் மார்ட்

0
273

ஆங்கில, ஆயுர்வேத மற்றும் யூனானி மருந்துகளை வாடிக்கையாளர்கள் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஹெல்த் மார்ட் நிறுவனம் கடந்த பெப்ரவரி 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை தர்கா நகரில் கோலாகலமாக திறந்துவைக்கப்பட்டது.

இல. 13/ஏ, பதாஹ் ஹாஜியார் மாவத்தை (நியூ றோட்), தர்கா நகர் எனும் முகவரியில் அமையப்பெற்றுள்ள ஹெல்த் மார்ட், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரான அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தியினால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

ஹெல்த் மார்ட் திறப்பு விழா தினத்தன்று முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா தலைவர் என்.எம்.அமீன், பேருவளை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் பதி ஹாஜியார், புரவலர் ஹாசீம் உமர் மற்றும் விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பி.எம்.பைரூஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தர்கா நகர் மக்கள் ஆங்கில மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு ஒரு இடம், ஆயுர்வேத மற்றும் யூனானி மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு இன்னுமொரு இடமென்று இப்போது ஒவ்வொரு இடமாக அலையவேண்டியதில்லை.

இந்த மூன்று வகையான மருந்துகளையும் ஒரே இடத்தில் ஹெல்த் மார்ட் நிறுவனத்தில் பெற்றுக்கொள்ள முடியும். ஆயுர்வேத மற்றும் யூனானி மருந்துகள், ஆங்கில மருந்துகள் போலவே குளிசைகளாகவே விற்பனை இங்கு செய்யப்படுவது இன்னுமொரு சிறப்பம்சமாகும்.

தர்கா நகரில் புதிதாக உதயமாகியுள்ள ஹெல்த் மார்ட் நிறுவனத்தில் கொள்வனவு செய்யும் பொருட்களுக்கு விசேட விலைக்கழிவுகள் வழங்கப்படுகின்றன.

அத்துடன் நீங்கள் கொள்வனவு செய்த மருந்துகள் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 0779595972 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தெளிவுபெற முடியும்.

தர்கா நகர், பேருவளை, வெலிப்பென்னை மற்றும் துந்துவ ஆகிய பிரதேசங்களில் வாழும் மக்கள் ஆங்கில, ஆயுர்வேத மற்றும் யூனானி மருந்துகளை ஒரே இடத்தில் மிகக் குறைந்த விலையில் இங்கு பெற்றுக்கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு மேலதிகமாக அழகுசாதனப் பொருட்கள், பால்மா வகைகள், குழந்தைகளுக்கான பால்மா, உணவுப் பொருட்கள் பெம்பஸ் வகைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை ஒரே கூரையின்கீழ் பெற்றுக்கொள்ள முடியும்.

LEAVE A REPLY