அடிதடியில் இறங்கிய வஹாப் ரியாஸ்- அகமது ஷேஷாட்க்கு அபராதம்!

0
255

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் மோதலில் ஈடுபட்ட வஹாப் ரியாஸ்- அகமது ஷேஷாட்க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் நேற்று முன்தினம் நடந்தப் போட்டியில் குயூட்ட கிளாடியட்டர்ஸ்- பெஷ்வர் ஷல்மி அணிகள் மோதின.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய குயூட்ட கிளாடியட்டர்ஸ் அணி விக்கெட்டுகளை இழந்து திணறிக் கொண்டிருந்தது.

தொடக்க வீரரான அகமது ஷேஷாட் 21 ஓட்டங்களில், வஹாப் ரியாஸின் பந்தில் ஸ்டெம்பை பறிகொடுத்தார்.

அப்போது வஹாப் ரியாஸ், ஷேஷாட்டை நோக்கி ஏதோ பேசிக் கொண்டே வந்தார். பின்னர் ஒருவரை ஒருவர் தள்ளி கடுமையான வார்த்தைகளால் மோதிக் கொண்டனர்.

ஆடுகளத்தில் இருவரும் மோதிய இந்த செயலால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி அடைந்தது.

இந்நிலையில் போட்டி கட்டணத்தில் இருந்து ஷேஷாட்த்துக்கு 30 சதவீதமும், வஹாப் ரியாசுக்கு 40 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY